தேசியம்
செய்திகள்

நுகர்வோர் கரிம வரியை நீக்க பிரதமர் முடிவு!

பிரதமராக தனது முதல் நகர்வாக நுகர்வோர் கரிம வரியை consumer carbon tax நீக்கும் முடிவை Mark Carney அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை (14) கனடாவின் 24-ஆவது பிரதமராக  Mark Carney-யும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது.

வெள்ளி மாலை கூடிய அமைச்சரவை April 1 ஆம் திகதி முதல் நுகர்வோர் கரிம வரியை நீக்கும் முடிவை எடுத்தது.

ஆனால் மத்திய கரிம மாசுபாடு வரி முறையை சட்ட மூலம் இல்லாமல் நீக்க முடியாது என Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கூறினார்.

முன்னாள் பிரதமர் Justin Trudeau முதன் முதலில் இந்த வரி  நிர்ணய திட்டத்தை 2019-இல் அமுல்படுத்தினார்.

அதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

Related posts

இளைஞர் வேலையற்றோர் விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

Lankathas Pathmanathan

4.25 சதவீதமாக அதிகரித்தது கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம்!

Lankathas Pathmanathan

சீன வெளியுறவு அமைச்சரின் கனடிய பயணத்தின் போது கேள்வி கேட்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment