November 13, 2026
தேசியம்
செய்திகள்

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை: Justin Trudeau

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கனடா அமெரிக்காவுடன் இணையலாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump பலமுறை பரிந்துரைத்துள்ளார்.

இந்த நிலையில் கனடாவை கையகப்படுத்த “பொருளாதார பலத்தை” பயன்படுத்த தயாராக இருப்பதாக Donald Trump கூறினார்.

ஆனாலும் Donald Trump பரிந்துரைத்துள்ள இந்த எண்ணம் நிறைவேறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என Justin Trudeau தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் சமூகங்களும் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வர்த்தக, பாதுகாப்பு பங்காளியாக இருப்பதன் மூலம் பயனடைகின்றனர் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலம் என Donald Trump முன்வைத்த கருத்துக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly மறுப்பு தெரிவித்தார்.

கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது எது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாததையே இந்த கருத்து காட்டுகிறது என குறிப்பிட்டார்

Related posts

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாக வீடு விற்பனையில் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தில் முன்மொழியப்பட்ட AI தரவு மையத்திற்கு  எதிரான போராட்டங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment