September 14, 2026
தேசியம்
செய்திகள்

வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser பதவி விலகினார்

மூத்த அமைச்சர் Sean Fraser தனது பதவியில் இருந்து விலகுவதாக  அறிவித்தார்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் Sean Fraser மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என திங்கட்கிழமை (16) அறிவித்தார்.

குடும்ப காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்துள்ள அதே தினம் Sean Fraser பதவி விலகல் அறிவித்தலும் வெளியானது.

இதன் மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தவர்களின் பட்டியலில் Sean Fraser இணைந்து கொள்கிறார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடாத Liberal அமைச்சர்களை மாற்ற விரைவில் அமைச்சரவை மாற்றம் ஒன்று வெளிவரவுள்ளதாக வதந்திகள் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

கனடிய  நாடாளுமன்றத்தில் 100 பெண்கள்

Lankathas Pathmanathan

பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 16 – திங்கள்)

Gaya Raja

Leave a Comment