இலையுதிர் காலத்தின் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்களிப்பு புதன்கிழமை (25) நடைபெற்றது.
இதில் 211க்கு 120 என்ற வாக்கு வித்தியாசத்தில் Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் Justin Trudeau அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியை Conservative கட்சி முன்னெடுத்தது.
Liberal அரசாங்கத்தை தோற்கடித்து தேர்தல் ஒன்றரை வலியுறுத்தும் வகையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி தலைவர் Pierre Poilievre செவ்வாய்க்கிழமை (24) முன்வைத்தார்.
எதிர்பார்ப்புக்கு அமைவாக சிறுபான்மை நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலையை கொண்டுள்ள இரண்டு எதிர்க்கட்சிகளும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
Bloc Quebecois , NDP கட்சிகள் அரசாங்கத்தை ஆதரித்தது, Justin Trudeauவுக்கு தொடர்ந்து ஆட்சி செய்ய தேவையான வாக்குகளை வழங்கியது.
கனடியர்களை முன்கூட்டிய தேர்தலுக்கு கட்டாயப்படுத்த உதவ தயாராக இல்லை என் NDP தலைவர் Jagmeet Singh Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
Conservative கட்சியை ஆதரிக்காத நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என இந்த இரு கட்சிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கருத்துக் கணிப்புகள் Conservative கட்சிக்கு சாதகமாக உள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் Conservative கட்சியின் பெரும்பான்மை அரசாங்கம் சாத்தியமாகும் நிலை உள்ளது.