தேசியம்
செய்திகள்

பிரதமருக்கு காலக்கெடு விதித்த Bloc Quebecois தலைவர்

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான நிபந்தனையை Bloc Quebecois கட்சி  தலைவர் வெளியிட்டார்.

புதன்கிழமை சமர்பிக்கப்பட்ட Justin Trudeau அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக Bloc Quebecois கட்சி வாக்களித்தது .

இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையை Bloc Quebecois தலைவர் வழங்கினார்.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாத காலக்கெடு ஒன்றை Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet வழங்கினார்.

தனது கட்சி முன்வைத்த இரண்டு சட்டமூலங்களை நிறைவேற்ற, அவர் Justin Trudaeuவுக்கு October 29 ஆம் வரை காலக்கெடு வாங்கினார்.

Liberal அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உதவுவதற்கு NDP கட்சியுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை இல்லாத நிலையில் இந்த காலக்கெடுவை Bloc Quebecois தலைவர் வழங்கியுள்ளார்.

இந்த கோரிக்கை குறிப்பிட காலக்கெடுவில்  நிறைவேற்றப்படவில்லை எனில் அரசாங்கத்தை தோற்கடிப்பது குறித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மான தோல்வி

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளரை மிரட்டிய சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment