September 27, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமரின் சிறப்பு ஆலோசகரானார் கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

Liberal கட்சியில் சிறப்பு ஆலோசகராக முன்னாள் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney இணைகிறார் .

திங்கட்கிழமை (09) இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பிரதமர் Justin Trudeau இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பிரதமரின் பொருளாதார வளர்ச்சி பணிக்குழுவின் தலைவராக Mark Carney பணியாற்றுவார் என கட்சியின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை  Conservative கட்சி விமர்சித்துள்ளது.

இந்த நிலையில் British Colombiaவில் நடைபெறும் Liberal  கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் Mark Carney கலந்து கொள்ளவுள்ளார்

அடுத்த சில நாட்களுக்கு அவர் கனடிய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாடவுள்ளார்

Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி கோடை காலத்தில் வெளியானது.

இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவது குறித்தும், Liberal கட்சியில் இணைவது குறித்தும் Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செம்மணி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: Patrick Brown

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

சர்வதேச வர்த்தகப் போருக்கு மத்தியிலும் கனடா வலிமையான நாடு: பிரதமர் பெருமிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment