September 19, 2024
தேசியம்
செய்திகள்

நாடு திரும்பும் கனடிய Olympic குழு உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு

கனடாவின் Olympic குழுவைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நாடு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கனடிய Olympic வீரர்கள் Paris கோடைகால போட்டியில் சாதனை படைத்தனர்.

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் கனடாவின் Olympic குழுவைச் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கு திங்கட்கிழமை (12) உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.

Pearson சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய குழுவில் மூன்று தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை கைப்பற்றிய Toronto நீச்சல் வீரர் Summer McIntoshஉம் அடக்கினார்.

மற்றொரு தொகுதி கனடிய Olympic வீரர்களுக்கு, Montreal Pierre Elliott Trudeau சர்வதே விமானத்தில் திங்களன்று வரவேற்பு வழங்கப்பட்டது.

இம்முறை கனடா ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி ஏழு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Related posts

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

Gaya Raja

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment