September 18, 2024
தேசியம்
செய்திகள்

கொலைக் குற்றச்சாட்டில் Jamaica பிரஜை கனடாவுக்கு நாடு கடத்தல்

Jamaica நாட்டின் பிரஜை ஒருவர் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

April மாதம் Torontoவில் நிகழ்ந்த ஒரு கத்திக்குத்து தொடர்பாக குற்றச்சாட்டை இவர் எதிர்கொள்கிறார்.

30 வயதான Jason Chambers கடந்த வெள்ளிக்கிழமை (09) கனடா வந்தடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

40 வயதான Mohamed “Mo” Abdalla Mohamed என்பவரின் மரணத்தில் அவர் இந்தக் குற்றச் சாட்டை எதிர்கொள்கிறார்.

அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைமை குழுவை அறிமுகம்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி- இரத்த உறைவால் New Brunswickகில் இரண்டாவது மரணம்!

Gaya Raja

Leave a Comment