தேசியம்
செய்திகள்

அனைத்து LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன!

LCBO ஊழியர்கள் வேலை மறுப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

LCBO வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தம் இதுவாகும்.

Ontario பொதுச் சேவை ஊழியர் சங்கம் (OPSEU) பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10,000 LCBO ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு 12:01 மணி முதல் சட்டப்பூர்வ வேலை மறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வெள்ளி ஆரம்பமான வேலை மறுப்பு காரணமாக அனைத்து LCBO கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாண ரீதியில் 669 LCBO கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தக் காலத்தில், வாடிக்கையாளர்கள் இணையதளம், mobile செயலி மூலம் மதுபானங்களை கொள்வனவு செய்யலாம் என LCBO குறிப்பிட்டது.

இரண்டு வாரங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், 32 LCBO கடைகள் மாகாணம் முழுவதும் July 19 முதல் திறக்கப்படும் என LCBO கூறியுள்ளது.

ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வரையறுக்கப்பட்ட நேரங்களில் இந்த LCBO கடைகள் செயல்படும் என தெரியவருகிறது.

Related posts

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Toronto துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்; ஐவர் கைது

Lankathas Pathmanathan

புதிய Toronto நகர சபை உறுப்பினர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment