September 11, 2026
தேசியம்
செய்திகள்

தமிழர்களின் திரையரங்கில் இரண்டு மாத காலத்தில் நான்கு முறை துப்பாக்கி சுடு

Richmond Hill நகரில் உள்ள தமிழர்களின் திரையரங்கில் இரண்டு மாத காலத்தில் நான்கு முறை துப்பாக்கி சுட்டு சம்பவம் நிகழ்ந்தது.

East Beaver Creek and Highway 7 சந்திப்புக்கு அருகில் உள்ள York திரையரங்கில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளை York பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இறுதியாக June 29ஆம் திகதி அதிகாலை 3:15 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக May 17, 19, 24 ஆம் திகதிகளில் துப்பாக்கி சுட்டு சம்பவங்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நான்கு வெவ்வேறு வாகனங்களில் சென்ற சந்தேக நபர்கள் York திரையரங்கின் முன் கதவு, யன்னல்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை அவதானித்ததாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களில் எவருக்கும் யாருங்கள் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் இதுவரை காவல்துறையினர் வெளியிடவில்லை.

ஒவ்வொரு சம்பவத்திலும் வெவ்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

சம்பவம் குறித்து சாட்சிகள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த January மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக காவல்துறையினர் இதே திரையரங்கிற்கு அழைக்கப்பட்டனர்.

May மாதம் Scarboroughவில் தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

McCowan & Finch சந்திப்பில் உள்ள Woodside திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment