தேசியம்
செய்திகள்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் காயம்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

Montreal நகருக்கு தெற்கில் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தின் விளைவாக நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை (01) இரவு Quebec மாகாணத்தின் St-Constant நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்திற்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அங்கு ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.

காயமடைந்தவர்களின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

Jasper தேசிய பூங்காவில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

முதற்குடிகளின்இனப்படுகொலை குறித்த உண்மை மற்றும் நீதி தேவை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

Gaya Raja

குடியிருப்பு பாடசாலைகள் ;கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்: ஐ. நா. அலுவலகம்

Gaya Raja

Leave a Comment