தேசியம்
செய்திகள்

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

கனடிய தமிழர் பேரவை – CTC – ஆலோசனை சபை (Advisory Council) உறுப்பினர் ராஜ் தவரட்ணசிங்கம் பதவி விலகியுள்ளார்.

கனடிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்ததற்கு பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்துள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம் அனுப்பியுள்ளதாக CTC உறுதிப்படுத்தியுள்ளது.

கனடிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்ததற்கு பொறுப்பேற்று  கனடிய தமிழர் பேரவையின்  நிர்வாக,  இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற வலியுறுத்தலின் மத்தியில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.

ஏற்கனவே கனடிய தமிழர் பேரவையின் மூன்று இயக்குனர்களில் ஒருவரான துஷி ஜெயராஜ் தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம் இந்த மாதம் 5ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக  அவர் தேசியத்திடம் கூறினார்.

உலக தமிழ் பேரவையும் – GTF – கனடிய தமிழர் பேரவையும்  – CTC –  இணைந்து முன்வைத்துள்ள இமாலய பிரகடனம் குறித்த CTC – இயக்குனரான தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை எனவும் துஷி ஜெயராஜ் தெரிவித்தார்.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி கனடிய தமிழர்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்த பொறுப்பற்ற நகர்வை கனடிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண பிரதி அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விஜய் தணிகாசலம், Ontario மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி,  Brampton நகர முதல்வர் Patrick Brown, Toronto கல்விச் சபை உறுப்பினர் நீதன் சான், Toronto கல்விச் சபை உறுப்பினர் யாழினி ராஜகுலசிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி, CTC ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் இயக்குனருமான அபிமன்யு சிங்கம், கனடிய தமிழர் தேசிய அவையின் தலைவர் ஸ்ரீ ரஞ்சன், தமிழர் உரிமைக் குழுவின் பொதுச் செயலாளர் கற்பனா நாகேந்திரன் என பலரும் கனடாவில் கண்டித்து வருகின்றனர்.

இந்த தொடர் கண்டங்களின் எதிரொலியாக 2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்க CTC முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Air Canada விடுமுறை நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது !

Gaya Raja

WestJet விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!

Gaya Raja

Leave a Comment