தேசியம்
செய்திகள்

John Toryயின் பணியாளருடனான உறவு நகரின் நடத்தை விதிகளை மீறியது: நேர்மை ஆணையர்

Toronto நகர முன்னாள்  முதல்வர் John Toryயின் பணியாளருடனான உறவு, நகரின் நடத்தை விதிகளை மீறியது என நேர்மை ஆணையர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (05) வெளியிடப்பட்ட 122 பக்க அறிக்கையில், நேர்மை ஆணையர் Jonathan Batty இந்த முடிவை அறிவித்தார்

John Tory தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியருடன் 2020 கோடை காலத்தில் உறவை ஆரம்பித்தார்.

நேர்மை ஆணையர் அறிக்கையில் அவரது பெயர் “Ms. A” என குறிப்பிடப்பட்டுள்ளது

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இதன் காரணமாக John Tory பதவி விலகினார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan

Leave a Comment