September 7, 2026
தேசியம்
செய்திகள்

கனடா வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கனடிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றவுள்ளார்

உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை (21) இரவு கனடாவை வந்தடைந்தார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுடன் சந்திப்பை தொடர்ந்து Volodymyr Zelenskyy கனடா  வந்தடைந்தார்.

இவரது வருகையை கனடிய பிரதமர் அலுவலகம் வியாழன் மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் அவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

வெள்ளிக்கிழமை அவர் தலைநகர் Ottawa, Toronto ஆகிய நகரங்களில் நிகழ்வுகளில் பங்கேற்பார்.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி Volodymyr Zelenskyy கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது .

முன்னதாக அவர் ஆளுநர் நாயகம் Mary Simonனை சந்திக்கவுள்ளார்.

வெள்ளி மாலை Toronto பயணிக்கும் Volodymyr Zelenskyy அங்கிருந்து வெள்ளி இரவு மீண்டும் உக்ரைன் பயணிப்பார் என தெரியவருகிறது.

Related posts

அடுத்த ஆட்டத்தில் கனடிய அணியின் தலைவர் களம் இறங்குவார்?

Lankathas Pathmanathan

LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment