September 24, 2026
தேசியம்
செய்திகள்

நான்கு தொகுதிகளில் திங்கட்கிழமை இடைத் தேர்தல்!

நான்கு தொகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (19) மத்திய இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Manitobaவில் Portage–Lisgar, Winnipeg South Centre Quebecகில் Notre-Dame-de-Grâce–Westmount, Ontarioவில் Oxford ஆகிய தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

அரசியலில் இருந்து விலகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் பதவிக்கு பதிலாகவும், முன்னாள் Liberal அமைச்சரின் மரணத்தால் வெற்றிடமான ஒரு ஆசனத்திற்காகவும் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் Manitobaவில் Portage–Lisgar தொகுதியில் கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier போட்டியிடவுள்ளார்.

அதேவேளை Quebecகில் Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Jonathan Pedneault போட்டியிடுகின்றார்.

Related posts

கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!

Gaya Raja

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

Gaya Raja

சர்ச்சைக்குரிய Greenbelt திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment