September 30, 2026
தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு நான்காவது வேட்பாளர்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie அதிகாரப்பூர்வமாக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

தலைமை பதவிக்கு நான்காவது வேட்பாளராக Bonnie Crombie தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

63 வயதான Bonnie Crombie, தலைமைப் பதவிக்கு போட்டியிட தனது பெயரை செவ்வாய்க்கிழமை (13) பதிவு செய்தார்.

Ontario Liberal கட்சியின் தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.

புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் Nathaniel Erskine-Smith, Yasir Naqvi, Ontario Liberal மாகாண சபை உறுப்பினர் Ted Hsu, ஆகியோர் Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Related posts

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

Lankathas Pathmanathan

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment