September 30, 2026
தேசியம்
செய்திகள்

பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் பொறுப்பான நிதி பங்களிப்பு: நிதி அமைச்சர்

நாட்டின் பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் வரவு செலவு திட்டத்தின் பொறுப்பான நிதி பங்களிப்பாகும் என நிதி அமைச்சர் Chrystia Freeland புதன்கிழமை (29) தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்கிழமை (28) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியில் வெவ்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றது

Toronto நகரின் COVID பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசு தனது வரவு செலவு திட்டத்தில் பணத்தையும் ஒதுக்க மறுத்துள்ளதாக Toronto துணை நகர முதல்வர் Jennifer McKelvie கூறினார்.

இதன் காரணமாக சேவைகளில் குறிப்பிடத்தக்க குறைப்புகள் அவசியம் எனவும் அவர் எச்சரிக்கின்றார்.

2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அதன் COVID இழப்புகளை ஈடுசெய்ய மத்திய அரசாங்கம் Toronto நகரத்திற்கு நிதி வழங்கியது.

ஆனாலும் 2022ஆம் ஆண்டுக்கு, இந்த வரவு செலவு திட்டத்தில் அவ்வாறு நிதி வழக்கப்படவில்லை.

அதேவேளை இந்த வரவு செலவு திட்டத்தில் மலிவு விலைகளில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து Calgary நகர முதல்வர் Jyoti Gondek மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related posts

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

Lankathas Pathmanathan

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan

Woodbine வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment