தேசியம்
செய்திகள்

Toronto உயர் நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது

Toronto உயர் நிலைப் பாடசாலையின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

வியாழக்கிழமை (16) மதியம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் காயமடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Peel பிராந்தியத்தில் தேடுதல் உத்தரவு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 10 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை .

Related posts

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

Fiona பேரழிவின் சேதங்களை பார்வையிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுகிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Leave a Comment