தேசியம்
செய்திகள்

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Fiano புயல் காரணமாக காப்பீடு செய்யப்படாத சேதங்களை ஈடுசெய்ய 300 மில்லியன் டொலர் மீட்பு நிதியை பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (04) இந்த அறிவுப்பு வெளியானது.

Atlantic கனடியர்களை புயலின் தாக்கத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும் வகையில் இந்த நிதி அமையும் என பிரதமர் அறிவித்தார்.

கனடாவை தாக்கிய வலிமையான புயல்களில் ஒன்றாக Fiano குறிப்பிடப்படுகிறது.

இந்த புயல் காரணமாக பல வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

வணிக நிறுவனங்கள், பாலங்கள், விமான நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த நிதியுதவி புயலால் சேதமடைந்த முக்கியமான உள்கட்டமைப்புகளை சரிசெய்து மீண்டும் கட்டமைப்பதற்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் என Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிதியானது இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 300 மில்லியன் டொலர்கள் வரை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

February மாதம் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment