தேசியம்
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சில் பணிபுரியும் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.
CERB கொடுப்பனவு திட்டத்தை வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சு நடைமுறைப்படுத்தியது.

இந்த அமைச்சு நடத்திய ஒரு உள்ளக விசாரணையில் அதன் ஊழியர்கள் சிலர்  CERB கொடுப்பனவுகளை பெற்றது தெரியவந்தது.

இவர்களில் 49 ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.

இவர்கள் பணியாளர் நம்பிக்கையை மீறியுள்ளதாக துணை அமைச்சர் Mary Crescenzi  கூறினார்.

CERB திட்டத்தின் கீழ் கனேடியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் 211 பில்லியன் டொலர்கள் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இவற்றில் தகுதியற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 4.6 பில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்டது.

மேலும் 27.4 பில்லியன் டொலர்கள் கொடுப்பனவு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

COVID தொற்று காரணமாக வேலை இழந்த கனடியர்களுக்கு CERB திட்டம் நிதி உதவி வழங்கியது.

Related posts

கனடா அமெரிக்கா எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தது December 21 வரை நீட்டிக்கப்படும்

Lankathas Pathmanathan

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja

Alberta மாகாணத்தை கனடாவிலிருந்து விலக்குவதற்கான மனுவில் கையெழுத்திடவில்லை: Danielle Smith

Lankathas Pathmanathan

Leave a Comment