தேசியம்
செய்திகள்

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக கனடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த உதவி அறிவித்தலை பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்.

வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், COVID தடுப்பூசிகளை தயாரிக்கவும் இந்த நிதியுதவியை பிரதமர் அறிவித்துள்ளார்.

750 மில்லியன் டொலர்களை ஆசியாவில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிப்பதாக Trudeau உறுதியளித்தார்.

தவிர உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கு 80 மில்லியன் டொலர்களை அவர் அறிவித்தார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமான G20 உச்சி மாநாட்டில் பிரதமர் Trudeau கலந்து கொண்டபோது இந்த உதவி திட்டங்களை அறிவித்தார்.

Related posts

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

Gaya Raja

போலியான COVID சோதனை முடிவுகளை வழங்கிய விமானப் பயணிகளுக்கு  17 ஆயிரம் டொலர் அபராதம்

Lankathas Pathmanathan

Leave a Comment