September 28, 2026
தேசியம்
செய்திகள்

வியாழக்கிழமை மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (15) சிறப்பு நாடாளுமன்ற அமர்வொன்றில் கலந்து கொள்வார்கள்.

மகாராணியின் மறைவுக்காக கடந்த வியாழக்கிழமை முதல் பிரதமர் Justin Trudeau அறிவித்த உத்தியோகபூர்வ துக்க காலத்தின் மத்தியில் கனடா தொடர்ந்தும் உள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க இருந்த நாடாளுமன்ற அமர்வுகள், மகாராணியின் இறுதி சடங்கிற்காக ஏற்கனவே ஒரு நாள் தாமதமாக ஆரம்பிக்கிறது.

இதேவேளை மகாராணியின் இறுதி சடங்கிற்கு பயணிக்கும் கனேடிய அதிகாரிகள் தூதுக் குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க, இங்கிலாந்தின் அரசுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களின் அலுவலகங்களுடன் தனது அரசு விவாதித்து வருவதாக பிரதமர் Trudeau தெரிவித்தார்.

Related posts

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

Gaya Raja

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட Pierre Poilievre வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment