தேசியம்
செய்திகள்

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

COVID தொற்று பிரதிபலிப்பு குறித்த சுயாதீன ஆலோசனை குழுவான Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது.

தமது குழு எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கலைக்கப்படும் என உறுதிப்படுத்தும் அறிக்கையை Ontario Science Advisory Table வெள்ளிக்கிழமை (26) வெளியிட்டுள்ளது.

COVID தொற்றுக்கான பிரதிபலிப்பு குறித்து தன்னார்வ விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்களின் குழு, Ontario Science Advisory Table என்ற பெயரில் இயங்கி சுயாதீன ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது குழு கலைக்கப்படும் என கடந்த வாரம் Ontario பொது சுகாதார மையம் அறிவித்தாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் Ontario Science Advisory Table தெரிவித்தது.

தமது பணி நிறுத்தப்படுவதாக அவர்கள் கூறினாலும், Doug Ford அரசாங்கம் அதை மறுக்கிறது.

இந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் Ontario பொது சுகாதார மையத்தால் ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடரும் என முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Related posts

அமெரிக்கா மீதான பதில் வரிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட பொருட்கள்?

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Lankathas Pathmanathan

கனடாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன: அமெரிக்க மேல்சபை உறுப்பினர் கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment