September 13, 2026
தேசியம்
செய்திகள்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கனடியர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பில் உள்ள கனடிய விசா விண்ணப்ப மையம் செவ்வாய்க்கிழமை (10) மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உண்டு என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

Lankathas Pathmanathan

Leave a Comment