தேசியம்
செய்திகள்

காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவன்

காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவனைக் கண்டுபிடிக்க உதவுமாறு York பிராந்திய காவல்துறை பொது மக்கள் உதவியை நாடியுள்ளது.

15 வயதான ஆதித்யா வசந்தன் என்ற சிறுவன் வியாழக்கிழமை (20) காலை முதல் காணாமல் போயுள்ளார்.

Torontoவுக்கு வடக்கே உள்ள East Gwillimbury நகரை சேர்ந்த இவர் இறுதியாக Markham நகரில் உள்ள அவரது பாடசாலை பகுதியில் காலை 11 மணியளவில் காணப்பட்டார்.
அவர் வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் York பிராந்திய காவல்துறையின் ஐந்தாம் மாவட்ட குற்றப் புலனாய்வு பணியகத்தின் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர் புலனாய்வாளர்களும் அவரது குடும்பத்தினரும் மேலும் தகவல் அறிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

Related posts

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

Gaya Raja

Paralympic போட்டிகளுக்கு 128 வீரர்களை அனுப்பும் கனடா!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!