தேசியம்
செய்திகள்

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு கனடியர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்

மாநில பாதுகாப்பு செயலாளர் மூன்று துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த மூவரும் கனேடியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் ஒருவர் மரணமடைந்தார்

Mexicoவில் நடந்த ஒரு சம்பவத்தால் கனேடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை சேகரித்து, தூதரக உதவியை வழங்கத் தயாராக உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மத்திய தேர்தலும், Ontario மாகாண சபை தேர்தலும் புதிய ஆண்டின் ஆரம்பத்தில்?

Lankathas Pathmanathan

Toronto நகரசபை இடை தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

இலங்கையருக்கு நிதி சேகரித்த Ottawa நகர முதல்வர்!

Lankathas Pathmanathan

Leave a Comment