தேசியம்
செய்திகள்

தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது

வியாழக்கிழமை (20) இரவு வரை வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் 10,534 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை புதன்கிழமை (19) இரவு வரை 10,546 ஆக இருந்தது.

நாடளாவிய ரீதியில் Ontarioவில் அதிக எண்ணிக்கையானவர்கள் தொடர்ந்து தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன் வெளியான தரவுகளின் அடிப்படையில் Ontarioவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,061 எனவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 594 எனவும் தெரியவருகின்றது.

மேலும் தொற்றின் காரணமாக 32, 220 மரணங்களும் இதுவரை கனடாவில் பதிவாகியுள்ளன.

Related posts

முகக் கவச கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படமாட்டாது: Alberta முதல்வர்

Lankathas Pathmanathan

இன்று Ontario மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

St. Catharines நகர தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment