தேசியம்
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சர் Christine Elliott  செவ்வாய்க்கிழமை (11) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

COVID காரணமாக பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கும்  நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும்  சர்வதேச அளவில் படித்த செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என அவர் கூறினார்.

1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும்  Elliott தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் மருத்துவமனைகளுக்கும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என  Elliott கூறினார்.

Related posts

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Gaya Raja

COVID நடவடிக்கைகளில் மாற்றங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment