தேசியம்
செய்திகள்

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராக களம் இறங்குகின்றார்.

அடுத்த வருடம் (2022) June மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியின் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நீதன் சான் போட்டியிடவுள்ளார்.

கட்சியின் வேட்பாளருக்கான நியமனப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட Scarborough Center தொகுதியின் NDP உறுப்பினர்கள் நீதன் சானுக்கு ஆதாரவாக வாக்களித்துள்ளனர்.

நீதன் சான், முன்னர் Toronto நகரசபை உறுப்பினராகவும், York பிராந்திய கல்விச்சபை உறுப்பினராகவும் தெரிவானவர்.

2003ஆம் ஆண்டு முதல் Liberal கட்சியின் சார்பின்ல் Brad Duguid பிரதிநிதித்துவப்படுத்திய Scarborough Centre தொகுதியில் கடந்த தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது.

தற்போது அந்தத் தொகுதியை Christina Mitas பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

Related posts

தொற்றின் நான்காவது அலைக்குள் கனடா : வைத்தியர்களின் புதிய எச்சரிக்கை!

Gaya Raja

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!