November 13, 2025
தேசியம்
செய்திகள்

விமான நிலைய COVID பரிசோதனை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்: சுகாதார அமைச்சர்

கனடாவுக்கு வரும் பயணிகளுக்கான விமான நிலைய COVID பரிசோதனை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என தெரியவருகின்றது.

கனடாவின் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்காவைத் தவிர கனடாவுக்கு வெளியில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கான புதிய COVID சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகள் விமான நிலையத்தைப் பொறுத்து எந்த நேரத்திலும் நடைமுறைக்கு வரலாம் என அமைச்சர் கூறினார்.

இந்த புதிய கொள்கையை அமல்படுத்துவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச பயணிகள் கனடாவில் தரையிறங்கும்போது விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசாங்கம் செவ்வாய்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் கனடா!

Related posts

ஐந்து மாகாணங்கள், ஒருபிரதேசத்தில் காற்றின் தர எச்சரிக்கை

Lankathas Pathmanathan

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Lankathas Pathmanathan

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment