வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் கனடா!

Omicron திரிபு குறித்த அச்சத்தின் மத்தியில் booster தடுப்பூசி குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும், வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கவும் கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தவிர, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் புதிய COVID சோதனைத் தேவைகளை கனடிய மத்திய அமைச்சர்களும் பொது சுகாதார அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை (31) அறிவித்தனர். அமெரிக்காவை தவிர, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகள், அவர்கள் கனடாவில் தரையிறங்கும் விமான நிலையத்தில் COVID  சோதனை செய்ய வேண்டும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை தடுப்பூசி போடப்பட்ட  அல்லது தடுப்பூசி போடப்படாத அனைத்து பயணிகளும் பொருந்தும் என சுகாதார அமைச்சர்  Jean-Yves Duclos கூறினார். அவர்கள் பரிசோதனையின் முடிவைப் பெறும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில் Omicron  திரிபு நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். Download Nulled WordPress ThemesDownload WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themesonline free coursedownload xiomi firmwareDownload Best WordPress Themes Free Downloadudemy free download