தேசியம்
செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியில் Alberta – உதவ முன்வந்த Ontario!

தீவிர மருத்துவமனை நெருக்கடிக்கு மத்தியில் Albertaவின் COVID உதவிக்கான அழைப்பை British Columbia நிராகரித்துள்ளது.

British Columbia வேறு எவருக்கும் உதவும் நிலையில் இல்லை என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Albertaவின் சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ள நாடளாவிய ரீதியில் உதவியை Albertaவின் உயர் சுகாதார அதிகாரி ஒருவர் கோரிய நிலையில் தனது பதிலை British Columbia வெளியிட்டது.

மாறாக Ontario மாகாணம் Albertaவுக்கு உதவ முன்வந்துள்ளது. அதேவேளை Albertaவுக்கு உதவும் வகையில் Manitoba மருந்துகளை அனுப்பவுள்ளதாக மாகாண முதல்வர் கூறினார்.

புதன்கிழமை Albertaவில் பொது சுகாதார அவசர நிலையை முதல்வர் Jason Kenney அறிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி தாரியும் பலி

Lankathas Pathmanathan

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Mark Carney அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment