February 13, 2025
தேசியம்
செய்திகள்

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Ontario மாகாண பாடசாலைகள் நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படுகிறது.

முதல்வர் Doug Ford , கல்வி அமைச்சர் Stephen Lecceயுடன் இணைந்து திங்கட்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றுக்களின் எண்ணிக்கை Ontarioவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Ontario  மாணவர்கள் தாமதமாக March விடுமுறையை இந்த வாரம் ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில்  March விடுமுறை முடிவுக்கு வர பாடசாலைகளின் நேரடி கல்வி மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுகின்றது. நேரடி  கற்றலுக்காக மீண்டும் பாடசாலைகளை திறக்கும் முடிவு பொது சுகாதார தரவுகளின் அடிப்படையில் அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Peel, Toronto, Wellington-Dufferin-Guelph பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஒரு வாரத்திற்கு முன்னரே மெய்நிகர் கற்றலுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

Leave a Comment