தேசியம்
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Ontario மாகாணம் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக தெரியவருகிறது.

மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், Doug Ford அரசாங்கம் மாகாண தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி கடவுச்சீட்டு விடயம் இதுவரை அமைச்சரவையின் கவனத்திற்கு வரவில்லை எனவும் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Ontario தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Mississaugaவில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பிரதமர் Justin Trudeau இது குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

Quebec, British Columbia ஆகிய மாகாணங்கள் போல் Ontarioவிலும் தடுப்பூசி சான்றிதழ் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

Ontario முதல்வர், பொது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை செவி மடுக்க வேண்டிய நேரம் இது எனவும் Trudeau கூறினார்.

தடுப்பூசி சான்றிதழ் திட்ட முறைகளை செயல்படுத்த தேர்வு செய்யும் மாகாணங்களுக்கு 1 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை பிரதமர் Trudeau தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார்.

தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தை உருவாக்கும் யோசனையை Ford முன்னர் எதிர்த்திருந்தார்.

Ontario மிக விரிவான தடுப்பூசி கொள்கைகளை கொண்டுள்ளது என பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, Ontario மாகாண முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

ஆனாலும் இந்த அறிக்கையில் தடுப்பூசி சான்றிதழ்கள் குறித்த எந்தக் குறிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சரக்கு வாகன ஓட்டுனர்களின் போராட்டம் வன்முறையாக மாறக்கூடும்: பிரதமர்

Lankathas Pathmanathan

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!