Unifor தொழிற்சங்கத்திற்கு எதிராக Stellantis நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
Brampton Assembly ஆலை விற்பனை தொடர்பான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள Brampton ஆலைக்குள் செல்வதை தொழிற்சங்கம் தடுப்பதாகக் குற்றம் சாட்டி, Unifor தொழிற்சங்கத்திற்கு எதிராக Stellantis நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (24) தொடரப்பட்டுள்ளது.
Brampton நகரில் உள்ள தங்களது ஆலை வளாகத்திற்குள் செல்வதை Unifor தொழிற்சங்க உறுப்பினர்கள் தடுப்பதாக கூறி Stellantis நிறுவனம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
கவச வாகன தயாரிப்பு நிறுவனமான Roshel-க்கு Brampton ஆலையை விற்பனை செய்வதாக Stellantis அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய, மாகாண அரசுகளுடனும், Unifor தொழிற்சங்கத்துடனும் கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த ஆலையை விற்றால் மத்திய அரசுக்குச் சுமார் $831 மில்லியன் திருப்பிச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது தொழிற்சங்கத்திற்கு எதிராக Stellantis நீதிமன்றத்தை நாடியுள்ளது.
