November 24, 2026
தேசியம்
செய்திகள்

British மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் கட்டாயமா? – Quebec சட்டத்தை இடைநிறுத்தி நீதிபதி அதிரடி உத்தரவு!

Quebec சட்டமன்ற உறுப்பினர்கள் British மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வதை கட்டாயமற்ற தாக்கிய மாகாணச் சட்டத்தை இடை நிறுத்தி Quebec நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Quebec சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் போது மன்னருக்கு உறுதிமொழி எடுப்பதை தவிர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை நீதிபதி Ian Demers திங்கட்கிழமை (23) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு Quebec சட்டமன்றம் மன்னருக்கான கட்டாய உறுதிமொழியை நீக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இருந்தது.

கனடாவின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மன்னருக்கான உறுதிமொழி கட்டாயமானது என்ற அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய இந்த நீதிமன்ற இடை நிறுத்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Quebec அரசியலமைப்பு, சட்டமன்ற நடைமுறைகளில் இந்தத் தீர்ப்பு முக்கியப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது

Lankathas Pathmanathan

Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிலாளர் அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment