Waterloo நகர முதல்வர் தேர்தலில் தமிழரான ஜெயஸ் பாலஸ்காந்தன் போட்டியிடுகிறார்.
இம்முறை தேர்தலில் தற்போதைய நகர முதல்வர் Dorothy McCabe மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து களம் இறங்கியுள்ள ஐந்து அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் தமிழரான ஜெயஸ் பாலஸ்காந்தன் அடங்குகிறார்.
1997-ஆம் ஆண்டு Wilfrid Laurier பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக Waterloo நகரத்திற்கு இடம்பெயர்ந்தார் இவர். அங்குள்ள இரு முன்னணிப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் பல்வேறு நகர குழுக்களில் தன்னார்வலராக செயல்பட்டுள்ளார்.
Waterloo நகர முதல்வர் தேர்தலில் நான்கு முக்கிய முன்னுரிமைகளை ஜெயஸ் பாலஸ்காந்தன் தனது பிரச்சாரத்தில் முன்வைத்துள்ளார்.
Waterloo நகராட்சித் தேர்தல் எதிர்வரும் October 26 அன்று நடைபெற உள்ளது.
