September 11, 2026
தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்குக் கனடா விதித்த அதிரடி முட்டுக்கட்டை

சர்வதேச மாணவர்களின் வருகையை கணிசமாகக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது.

புதிய குடிவரவுக் கொள்கை நடவடிக்கைகளை கனடிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் உயர் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

கனடிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச மாணவர்களின் வருகையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கனடாவில் தங்கிப் படிக்கும் சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

2024-ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டு January முதல் June மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவிற்கு வந்த புதிய சர்வதேச மாணவர்களின் வருகை 82 சதவீதம்  வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்தாலும், கல்லூரிகளை விட பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

புதிய கல்வி அனுமதி பெற்றவர்களில் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களின் விகிதம் 2024-இல் 30 சதவீதமாக இருந்து, 2025-இல் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பட்டதாரி மாணவர்களை இலக்காகக் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த புதிய போக்கு வரும் காலங்களிலும் தொடரும் எனவும் கனடிய அரசு விளக்கமளித்துள்ளது.

உலகின் மிகச் சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்: Quebec சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க வரி February 1 நடைமுறைக்கு வரும்: வெள்ளை மாளிகை

Lankathas Pathmanathan

Leave a Comment