அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலரின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு கனடா-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் Pete Hegseth, கனடியப் பயிற்சி வீரர்களை கேலி செய்வது போன்ற ஒரு ஒளிப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
கனடிய இராணுவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கும் இழிவுபடுத்துவதற்குமான முயற்சியாகவே விமர்சகர்கள் இப்பதிவை கருதும் நிலையில், இது இணையத்தில் பரவலான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இந்தப் பதிவு Pete Hegseth வகிக்கும் பதவிக்குரிய கண்ணியத்திற்கு குறைவானது என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty கண்டித்தார்.
கனடிய பிரதமர் Mark Carney-யும் இந்த பதிவை கண்டித்துள்ளார்.
இந்த இணையவழி துன்புறுத்தல், கேலி முயற்சியை கனடாவின் Army Cadet League வன்மையாகக் கண்டித்தது.
ஆனாலும் இந்த சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுக்குப் Pentagon ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தப் பதிவும், அதற்குப் Pentagon அளித்த ஆதரவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக British Colombia மாகாண முதல்வர் David Eby கூறினார்.
இரு நாடுகளும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்தப் பதிவு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் ஆபத்துகள் நிறைந்த உலகில் ஒற்றுமை எனும் கருப்பொருளின் கீழ், கனடா, அமெரிக்கா உட்பட இருபத்து நான்குக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்கள் இந்த வாரம் British Colombia மாகாணத்தில் ஒன்று கூடுகின்றனர்.
ஆனாலும் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பிக்கும் Indo-Pacific இராணுவத் தலைவர்களின் மாநாட்டின் சுமுகமான போக்கிற்கு சவாலாக இந்த பதிவு மாறும் அபாயம் தோன்றியுள்ளது.
