அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கைகள் குறித்து Alberta-வின் தற்போதைய, முன்னாள் முதல்வர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மீது விதிக்கப்படும் பதிலடி வரி விதிப்புகள் மத்திய, மாகாண பொருளாதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என Alberta மாகாண முதல்வர் Danielle Smith எச்சரித்தார்.
அமெரிக்கா மீது கனடா விதிக்கவுள்ள பதிலடி வரி விதிப்புகள் தனது மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கிறார்.
மத்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் பதிலடி நடவடிக்கைகளின் அவசியத்தை தான் புரிந்து கொள்வதாக கூறிய Danielle Smith, கனடிய வணிகங்கள் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வர்த்தகப் போருக்கு Donald Trump மீது Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழி சுமத்த வேண்டும் என Jason Kenney தெரிவித்தார்.
வர்த்தகப் போர் தொடர்பான பழியை Donald Trump மீது திருப்ப வேண்டும் எனவும் Jason Kenney கூறினார்.
நீண்டகாலமாக நீடிக்கும் வர்த்தகப் போருக்கு Doanld Trump தான் காரணம் என்பதைச் சில Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கொள்கை விவகாரங்களில் Liberal கட்சியினரை பொறுப்புக்கூற வைப்பதற்கும், வர்த்தகப் போருக்குக் காரணமான சரியான நபர் மீது பழி சுமத்துவதற்கும் இடையே Conservative கட்சியினர் ஒரு சமநிலையை பேண வேண்டும் எனவும் Jason Kenney கூறினார்.
Jason Kenney 2019 முதல் 2022 வரை Alberta மாகாண முதல்வராக பணியாற்றி, Danielle Smith-தால் அப்பதவியில் மாற்றப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
