Toronto நகர சபைக்கு திரும்பும் ஆர்வத்தை Mike Layton வெளிப்படுத்தினார்.
இந்த இலையுதிர் காலத்தில் நடைபெற உள்ள நகர சபைத் தேர்தலின் மூலம், Toronto நகர சபைக்கு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக Mike Layton அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (17) காலை ஒரு சமூக ஊடகப் பதிவில், University-Rosedale முன்னாள் பிரதிநிதியான Mike Layton, தற்போதைய பிரதிநிதியான Dianne Saxe-இடமிருந்து இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக போட்டியிடுவதாக கூறினார்.
பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்தத் தொகுதிக்கான போட்டியில் Dianne Saxe உள்ளிட்ட11 வேட்பாளர்களுடன், 45 வயதான Mike Layton இணையவுள்ளார்.
Mike Layton மறைந்த மத்திய NDP தலைவர் Jack Layton-னின் மகனும், நகர முதல்வர் Olivia Chow-வின் வளர்ப்பு மகனாவார்.
இவர் முன்னதாக 12 ஆண்டுகள் University-Rosedale பகுதிக்கான மாநகரப்பை உறுப்பினராக பணியாற்றினார்.
தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதைக் காரணமாகக் கூறி, 2022-ல் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை.
நடைபெறவுள்ள தேர்தல், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு முற்போக்கு நகர சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பாகும் எனக் கூறிய அவர், அந்த வழிநடத்த தான் உதவ விரும்புவுதாக தெரிவித்தார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
Toronto நகரில் October 26 அன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.
