குற்றவியல் குற்றச்சாட்டுகளின் பேரில் பிணை வழங்கப்படுபவர்கள் ரொக்க வைப்புத் தொகையை Ontario மாகாணம் கட்டாயமாக்க உள்ளது.
பணப் பிணை வைப்பு தொகையை செலுத்த வேண்டும் என Ontario மாகாணம் திங்கட்கிழமை (17) முதல் கட்டாயமாக்கவுள்ளது.
June மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இந்த மாற்றம் இணைக்கப்பட்டது.
இந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை மாகாணம் முன்னதாகவே குறிப்பிடவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள், முழுப் பிணை தொகையையும் பணமாக செலுத்த வேண்டும் என Ontario அரசாங்கம் கூறுகிறது.
கனடிய குடிமை உரிமைகள் சங்கம், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை அடுத்த வாரம் இந்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு அவசர அரசியலமைப்புச் சட்ட சவாலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டத்தை “நீதியற்றது, அரசியலமைப்புக்கு முரணானது” என அந்த இரண்டு சங்கங்களும் குறிப்பிட்டன.
