Toronto நகர முதல்வர் தேர்தலுக்கான மக்கள் ஆதரவு கருத்து கணிப்பில் Olivia Chow தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
வெள்ளிக்கிழமை (07) வெளியான இந்த புதிய கருத்து கணிப்பில் Chris Alexander 10 சதவீத ஆதரவுடன் களமிறங்கியுள்ள நிலையில், Olivia Chow தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Olivia Chow தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், புதியவரான Chris Alexander, முடிவெடுத்த, வாக்களிக்கச் சார்புள்ள வாக்காளர்களில் சுமார் 10 சதவீதத்தினர் ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
Chris Alexander அதிகாரப்பூர்வமாக போட்டியில் களமிறங்கிய சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், August 4, 5 ஆகிய திகதிகளில் 1,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
முடிவெடுத்த, வாக்களிக்கச் சார்புள்ள வாக்காளர்களில் 47 சதவிகிதத்தினர் ஆதரவை Olivia Chow பெற்றுள்ளார்.
Brad Bradford 40 சதவிகித ஆதரவையும், Chris Alexander 10 சதவிகித ஆதரவையும் பெற்றுள்ளதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
Chris Alexander போட்டியில் நுழைவதற்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், Olivia Chow 49 சதவீதமும், Brad Bradford 41 சதவீதமும், ‘வேறு ஒரு’ வேட்பாளர் 10 சதவீதமும் ஆதரவை பெற்றிருந்தனர்.
இந்தச் சமீபத்திய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் மூன்று சதவீதம் பேர் மட்டுமே “வேறு ஒருவருக்கு” வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறினர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின்படி, மும்முனை வாக்கெடுப்பில் Brad Bradford-டை விட Olivia Chow 15 புள்ளிகள் முன்னிலை பெறுவார் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதைய புள்ளிவிவரங்கள் அதை விட மிகவும் நெருக்கமான ஒரு போட்டியை சுட்டிக்காட்டுகின்றன.
முடிவெடுக்காதவர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களிலும், Olivia Chow 38 சதவீதமும், Brad Bradford 32 சதவீதமும், Chris Alexander எட்டு சதவீதமும் ஆதரவை பெற்றனர்.
இருப்பினும், பதிலளித்தவர்களில் இருபது சதவீதம் பேர் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறினர்.
