Ajax மாகாணசபை உறுப்பினர் Ontario Liberal தலைமை போட்டியில் இருந்து விலகுகிறார்.
Ontario Liberal கட்சியின் அடுத்த தலைவராகும் முயற்சியை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Rob Cerjanec கைவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (05) சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Rob Cerjanec தனது முடிவை அறிவித்தார்.
தனது குடும்பத்தினர், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து உரையாடிய பின்னர், தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி வைக்கும் கடினமான முடிவை எடுத்ததாக Rob Cerjanec தனது முடிவில் அறிவித்தார்.
Rob Cerjanec கடந்த May மாதத்தில் தலைமைத்துவ போட்டியில் களமிறங்குவதாக முதலில் அறிவித்தார்.
Ontario Liberal தலைமை போட்டியில் தொடர்ந்து நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Navdeep Bains, Toronto மாகாணசபை உறுப்பினர் Lee Fairclough, Eric Lombardi, Dylan Marando ஆகியோர் இந்த போட்டியில் உள்ளனர்.
Liberal கட்சி உறுப்பினர்கள் புதிய தலைவருக்கு November 9 முதல் 20-ஆம் திகதி வரை வாக்களிப்பார்கள்.
கட்சியின் அடுத்த தலைவர் November 21-ஆம் திகதி அறிவிக்கப்படுவார்.
