Saskatchewan RCMP அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர்.
Saskatchewan மாகாணத்தின் Melville நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு RCMP அதிகாரிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நிகழ்ந்தது.
ஞாயிறு இரவு சுமார் 9:30 மணியளவில் ஒரு வீட்டில் தாக்குதல் நடந்ததாக கிடைத்த புகாரை அடுத்து அங்கு RCMP வரவழைக்கப்பட்டது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரண்டு RCMP அதிகாரிகள் காயமடைந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடுமையான காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபரான ஆண் அடையாளம் காணப்பட்டார்.
சந்தேக நபர் வீட்டிற்குள் இருந்ததாலும், பொது மக்கள் பாதுகாப்பிற்கு அதிக ஆபத்து இல்லை என அதிகாரிகள் தீர்மானித்ததாலும், இதில் எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
அதிகாலை 2 மணியளவில், சந்தேக நபரும் மற்றொரு நபரும் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு நபர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கும் இந்தத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
Saskatchewan RCMP தீவிர குற்றப்பிரிவு (SCU) இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வருகிறது.
இதில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை சுமத்தப்படவில்லை.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து RCMP மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
