தேசியம்
செய்திகள்

Toronto நகரசபை தேர்தலில் மற்றுமொரு தமிழர்

Toronto நகரசபை தேர்தலில் Don Valley North தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

இதில் Toronto நகரசபையின் 17-ஆவது வட்டாரத்தில் போட்டியிட தமிழரான Roy சமாதானம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இவர் June 1-ஆம் திகதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலாவது தமிழரும் ஐந்தாவது வேட்பாளரும் இவராவார்.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக Shelley Carroll பதவி வகிக்கிறார்.

இவர் கடந்த தேர்தலில் 12,897 வாக்குகளை பெற்றிருந்தார்.

அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத்தீ காரணமாக 80 வயது பெண் மரணம்

Lankathas Pathmanathan

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment