தேசியம்
செய்திகள்

CUPE Ontario தலைவர் விடுப்பில்

CUPE Ontario-வின் தலைவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகார் விசாரணை காரணமாக, கனடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) Ontario தலைவர் Fred Hahn ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் CUPE Ontario ஊழியர் ஒருவர் முன்வைத்த “பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள்” தொடர்பான விசாரணையின் விளைவாக, Fred Hahn  ஊதியத்துடன் கூடிய விடுப்பில் உள்ளார்.

இந்த சுயாதீன விசாரணை நடைபெறும் காலம் முழுவதும் அவர் விடுப்பில் இருப்பதாக தொழிற்சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது ஒரு வழக்கமான நடைமுறை நடவடிக்கையே தவிர, ஒழுங்கு நடவடிக்கை அல்ல என கூறப்படுகிறது.

May மாதம் நடைபெறும் CUPE Ontario மாநாட்டில், சங்கத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்பதை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Fred Hahn உறுதிப்படுத்தினார்.

Related posts

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment