தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட கனடிய சுரங்க நிறுவன தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு?

கடத்தப்பட்ட கனடிய சுரங்க நிறுவன தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

Mexico-வில்  கடத்தப்பட்ட சில தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டதை கனடிய சுரங்க நிறுவனமான Vizsla Silver திங்கட்கிழமை (09) உறுதிப்படுத்தியது.

மேற்கு மாநிலமான Sinaloa-வில் உள்ள Concordia நகருக்கு அருகிலுள்ள Vancouver-ரை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் சுரங்கத் தளத்தில் இருந்து கடந்த மாதம் பத்து தொழிலாளர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களை மீட்கும் தேடுதல நகர்வில் உள்ளூர் அதிகாரிகளும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட தமது ஊழியர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக குடும்பத்தினர் மூலம் தெரியவந்ததாக Vizsla Silver நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் Mexican அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் Vizsla Silver கூறியது.

இந்த துயரமான இழப்பு குறித்து வருத்தமடைந்துள்ளோம் என Vizsla Silver தலைமை நிர்வாக அதிகாரி Michael Konnert ஒரு அறிக்கையில் கூறினார்.

தமது அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக Mexican தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (06) அறிவித்தது.

ஆனால் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற விபரம் வெளியாகவில்லை.

தொழிலாளர்கள் காணாமல் போனதில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Mexican தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து January 24-ஆம் திகதி தமக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த போராடும் ஆயுத குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளதால்,  Sinaloa-வின் சில பகுதிகளில் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கனடிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Torontoவிலும் Quebec நகரத்திலும் வார விடுமுறையில் எதிர்ப்பு போராட்டம்

Lankathas Pathmanathan

அமைச்சரவை மாற்றத்தை வரவேற்கும் ஆசிரியர் சங்கங்கள்

Lankathas Pathmanathan

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment