சீக்கிய பிரிவினைவாத இயக்கம் உள்ளிட்ட பாதுகாப்பு சூழ்நிலை குறித்து கனடாவுடன் உரையாடி வருவதாக கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
இந்தியாவும் கனடாவும் இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடி வருகின்றனர்.
இதில் சீக்கிய பிரிவினைவாத இயக்கம் குறித்த உரையாடல் அடங்குவதாக கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் Dinesh Kumar Patnaik தெரிவித்தார்.
கனடாவில் நடந்த கொலைகள் குறித்து இந்திய தூதர்களை தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2023-ஆம் ஆண்டு முதல் பதட்டமான நிலையை அடைந்துள்ளது.
கனடிய சீக்கியத் தலைவர் Hardeep Singh Nijjar படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டதாக “நம்பகமான குற்றச்சாட்டுகள்” இருப்பதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ‘அபத்தமானது’ என புதிய உயர் ஸ்தானிகர் Dinesh Kumar Patnaik கூறினார்.
இந்த விடயத்தில் RCMP , முன்னாள் கனடிய பிரதமர் ஆகியோரின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவுக்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர் உட்பட ஆறு இராஜதந்திரிகளை கனடா வெளியேற்றியது.
அதேநேரம் இந்தியா தனது பங்குக்கு ஆறு கனடிய இராஜதந்திரிகளை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
