September 27, 2026
தேசியம்
செய்திகள்

வெறுப்புணர்வு ரீதியான வன்முறை குறைச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Markham நகர விடுதி ஊழியரை தாக்கியதான குற்றச்சாட்டு தமிழருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

Markham நகரில் நிகழ்ந்த சந்தேகத்திற்குரிய வெறுப்பால் தூண்டப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பாக 31 வயது தமிழர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒரு இஸ்லாமிய விடுதி ஊழியர் படுகாயமடைந்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர் Toronto. நகரைச் சேர்ந்த 31 வயதான கீதன்சன் ஸ்ரீரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் September 28-ஆம் திகதி அதிகாலையில் Highway 7 கிழக்கு – Commerce Valley Drive மேற்கில் அமைந்துள்ள விடுதியில் நிகழ்ந்தது.

குடிபோதையில் இருந்த ஒரு விருந்தினர் குறித்து புகார் அளிக்க York பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

விருந்தினர் தனது தங்கும் அறைக்கு பணம் செலுத்த முயன்ற போது அவரது கடன் அட்டை நிராகரிக்கப்பட்டது.

இது விடுதி விருந்தினருக்கும் பணியாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட காரணமானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட விடுதி ஊழியர் இஸ்லாமியர் என்பதை விருந்தினர் அறிந்ததும், அவரது நடத்தை மாறியதாகவும், கோபமடைந்த விருந்தினர் ஊழியரை கொல்லப் போவதாக எச்சரித்து, அவரை ஒரு அறைக்கு விரட்டிச் சென்று, அங்கு அவரை வன்முறையான முறையில் தாக்கியதாக காவல்துறையினர்  குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவ இடத்தில் 54 வயது விடுதி ஊழியர் தலையில் பலத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்.

அவர் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் கைதான சந்தேக நபருக்கு எதிராக உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அனைத்து செயல்களையும் வன்மையாகக் கண்டிப்பதாக York பிராந்திய காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts

விரைவில் Mark Carney – Donald Trump சந்திப்பு?

Lankathas Pathmanathan

தமிழர்களுக்கு சொந்தமான Scarborough மதுபான விடுதி துப்பாக்கி சூடு உட்பட வன்முறை சம்பவங்கள் குற்றச்சாட்டில் 10 பேர்!

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment